லங்கா சோல்ட் எனப்படும் உப்பு உற்பத்தி நிறுவனம் ஹம்பாந்தோட்டை உப்பளத்தின் உப்பு உற்பத்திப் பணிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
கடந்த 18 மாதங்களாக பாதகமான காலநிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உப்பு உற்பத்தி நடவடிக்கைகள் இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக லங்கா சோல்ட் நிறுவனத்தின் தலைவர் நந்தன திலக தெரிவித்துள்ளார்.
இதனை முன்னிட்டு இன்றையதினம்(21.07.2025) பூந்தல உப்பளத்தில் உப்பு உற்பத்திக்கான தேசிய நிகழ்வு நடைபெற்றது. இதன் மூலம் 40,000 மெட்ரிக் தொன் உப்பு உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதகமான வானிலை
கடந்த ஆண்டு 100,000 மெட்ரிக் தொன் உப்பு உற்பத்தி செய்ய இலக்கு வைக்கப்பட்டிருந்த போதிலும் பாதகமான வானிலை காரணமாக 40,000 மெட்ரிக் தொன் மட்டுமே விளைச்சலாப் பெறப்பட்டிருந்தது.
மஹாலேவய உப்பளத்தில் உப்பு அறுவடை நாளை (22.07.2025) தொடங்கப்படவுள்ளதாகவும் லங்கா சோல்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
