Home இலங்கை பொருளாதாரம் உப்பு தட்டுப்பாட்டிற்கு விரைவில் தீர்வு: அரசாங்கம் உறுதி

உப்பு தட்டுப்பாட்டிற்கு விரைவில் தீர்வு: அரசாங்கம் உறுதி

0

நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான அளவு உப்பு உற்பத்தி செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், எதிர்பாராத மழையால் உப்பு அறுவடை உருகி, இடையூறுகள் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

உப்பு இறக்குமதி

அதன்படி, போதுமான அளவு உப்பு இறக்குமதி செய்யப்பட வேண்டியுள்ளது என்று கூறிய அவர், இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இருப்பு நாளை நாட்டிற்கு வந்து சேரும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உப்பு தட்டுப்பாட்டுக்கு நுகர்வோரின் தேவையற்ற அச்சமே காரணம் என லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி.நந்தனதிலக தெரிவித்துள்ளார்.

இதுதான் அவர்களை அதிகளவில் உப்பை கொள்வனவு செய்ய வழிவகுத்துள்ளதாகவும், இதனால் உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் புதன்கிழமைக்குள் போதுமான அளவு உப்பை நாட்டிற்கு கொண்டு வந்து சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version