Home சினிமா பரவிய வாந்திக்கு முற்றுப்புள்ளி.. சமந்தா எடுத்து அதிரடி முடிவு!

பரவிய வாந்திக்கு முற்றுப்புள்ளி.. சமந்தா எடுத்து அதிரடி முடிவு!

0

யே மாயா சேசாவே

கவுதம் மேனன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த படம் யே மாயா சேசாவே. தமிழில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்தான் இப்படம். இப்படத்தில் சமந்தா – நாகசைதன்யா இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

இதை தொடர்ந்து மனம் எங்கிற படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், நான்கு ஆண்டுகளுக்கு பின் 2021ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

விஜயகாந்த் மகன் நடித்துள்ள படைத்தலைவன் படத்தின் 5 நாட்கள் வசூல் விவரம்.. இதோ

சமந்தா – நாகசைதன்யா இருவரும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் யே மாயா சேசாவே. இப்படம் 15 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், இப்படத்தை தற்போது ரீ ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளனர். வருகிற ஜூலை 18ம் தேதி யே மாயா சேசாவே படம் ரீ ரிலீஸ் ஆகிறது.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

இந்த நிலையில், இப்படத்தை விளம்பரப்படுத்த ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் ஒன்றாக கலந்துகொள்ளப்போகிறார்கள் என வதந்திகள் பரவி வந்தது. இப்படியிருக்க, இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமந்தா பதில் கொடுத்துள்ளார்.

“இல்லை, நான் யாருடனும் யே மாயா சேசாவே படத்தின் விளம்பரத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை. அந்த படத்தை விளம்பரப்படுத்தவும் எனக்கு விருப்பம் இல்லை. இந்த பேச்சு எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை. தயவு செய்து தேவையில்லாத வதந்திகளை பரப்பாதீங்க”. என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version