Home சினிமா 1100 கோடி வசூல் செய்த படத்தை நிராகரித்த சமந்தா.. காரணம் என்ன

1100 கோடி வசூல் செய்த படத்தை நிராகரித்த சமந்தா.. காரணம் என்ன

0

சமந்தா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தற்போது பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸுக்கு பின், சமந்தா நடிப்பில் சிட்டாடல் ஹனி பனி எனும் வெப் சீரிஸ் உருவாகி கடந்த வாரம் வெளிவந்தது. ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா நடித்து வெளிவந்த சிட்டாடல் வெப் சீரிஸின் ஸ்பின் ஆஃப் தான் இது.

ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்கிய இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய சினிமாவில் தற்போது தனி இடத்தை பிடித்துள்ள சமந்தா, பாலிவுட்டில் மிகப்பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும், அதனை மிஸ் செய்துள்ளார்.

நிராகரித்த சமந்தா

கடந்த 2023ல் வெளிவந்த அப்படம் உலகளவில் ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அது வேறு யாருடைய படமும் இல்லை, ஷாருக்கானின் ஜவான் படம் தான்.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவான இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் சமந்தாவை தான் கேட்டுள்ளார்களாம். ஆனால், சில தனிப்பட்ட காரணங்களால் இப்படத்தை சமந்தா நிராகரித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

அதன்பின் அந்த கதாபாத்திரத்தில் நயன்தாராவை தேர்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Source: https://cineulagam.com/article/samantha-rejected-1200-crore-box-office-movie-1731648309

NO COMMENTS

Exit mobile version