Home சினிமா முன்னாள் கணவர் நினைவாக இருந்த விஷயத்தை உடலில் இருந்து நீக்கிய சமந்தா! புகைப்படம் இதோ

முன்னாள் கணவர் நினைவாக இருந்த விஷயத்தை உடலில் இருந்து நீக்கிய சமந்தா! புகைப்படம் இதோ

0

சமந்தா 

இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகை சமந்தா கடந்த 2017ம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார்.

நான்கு ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்துக்கு பின் தனது திருமணம் மற்றும் முன்னாள் கணவர் குறித்து நினைவாக இருக்கும் விஷயங்களை சமந்தா மாற்றியமைத்து வந்தார். தனது நிச்சயதார்த்த மோதிரம் மற்றும் திருமண ஆடையை முழுவதுமாக மாற்றியமைத்துள்ளார்.

மூன்று நாட்களில் உலகளவில் தக் லைஃப் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

டாட்டூவை நீக்கிய சமந்தா

அந்த வகையில் தற்போது தனது முன்னாள் கணவர் நினைவாக தனது முதுகில் குத்தியிருந்த YMC என்கிற டாட்டூவை நீக்கியுள்ளார். நாக சைதன்யாவுடன் சமந்தா இணைந்து நடித்த முதல் படம் ‘யே மாய சேசாவே’.

இப்படத்தில் இருவரும் இணைந்து நடிக்கும்போது காதல் மலர்ந்ததால், அப்படத்தின் நினைவாக YMC என்கிற டாட்டூவை தனது முதுகில் குத்தியிருந்தார் சமந்தா. ஆனால், தற்போது விவகாரத்தாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அதனை நீக்கியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version