Home இலங்கை அரசியல் மக்கள் வீதிக்கு இறங்கும் நிலைமை வரும் என எச்சரிக்கை

மக்கள் வீதிக்கு இறங்கும் நிலைமை வரும் என எச்சரிக்கை

0

மக்கள் வீதிக்கு இறங்கும் நிலைமை வரும் என புதிய ஜனநாயக முன்னணியின் எம்.பி சாமர சம்பத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் முன்னேற்றமடைந்துள்ள நிறுவனமாக ஶ்ரீலங்கன் விமான சேவை உள்ளது. அதற்காக ரூ. 20,000 மில்லியன் வழங்கப்பட்டது. இப்படி நிதி
வழங்கினால் அது முன்னேற்றம் காணாமல் இருக்குமா?

நாட்டில் 14500 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன.

பிணையின்றி கடன் 

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு வழங்கிய பணத்தை பிரித்து பார்த்தால் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் ரூ. 17 இலட்சம் என்ற அடிப்படையில் நிதியை வழங்கியிருக்கலாம்.

அதேவேளை பிணையின்றி கடன் வழங்குவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஆனால் எவருக்காவது பிணையின்றி கடன் கிடைத்துள்ளதா? என பார்த்தால் அப்படிக் கிடைக்கவில்லை.

மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையைச் சேர்ந்தவர். அவர் அந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்துள்ளார். அதேபோன்று மஹிந்த ராஜபக்ஷவும் அம்பாந்தோட்டையை
அபிவிருத்தி செய்துள்ளார்.

அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பை அபிவிருத்தி செய்துள்ளார்.

நீங்கள் நாளுக்கு நாள் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். மக்கள் வீதிக்கு இறங்கும் நிலைமை வரும். உங்களுக்கு அதிகளவில் மக்கள் வாக்களித்தனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இலட்சக்கணக்கில் மக்கள் வாக்குகளை வழங்கினர்.

நிலைமை

நீங்கள் அந்த சாதனைகளை உடைத்துக்கொள்ள வேண்டாம். நிமல் சிறிபால டி சில்வா போன்றோர் உங்களைப் போன்று சாதனை வாக்குகளைப் பெற்றனர். இப்போது வீட்டில் இருக்கின்றார்.

இதுபோன்ற நிலைமை உங்களுக்கு வரும்.

இப்போது நாங்கள் காட்டுச் செடிகள், நீங்கள் தங்கச் செடிகள். ஆனால், இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் காட்டுச் செடிகளாகி, நாங்கள் தங்கச் செடிகளாகிவிடுவோம் என சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version