Home இலங்கை சமூகம் களுவாஞ்சிகுடியில் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் சம்பந்தனுக்கு நினைவேந்தல்

களுவாஞ்சிகுடியில் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் சம்பந்தனுக்கு நினைவேந்தல்

0

அமரர் இராஜவரோதயம் சம்பந்தனின் நினைவேந்தல் நிகழ்வு இலங்கை தமிழரசுக்கட்சியின் களுவாஞ்சிக்குடி பிரதேச குழுவின் தலைவரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது நேற்று (06.07.20204) பி.ப 4.00 மணியளவில் களுவாஞ்சிகுடி பேரூந்து நிலையத்தில்
இடம்பெற்றது.

மௌன அஞ்சலி

இதன்போது நினைவு சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மௌன அஞ்சலி ,
செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரைகளும் இடம்பெற்றன. 

இந் நிகழ்வில் சர்வ மத தலைவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், பா.அரியநேந்திரன், ஞா.கிருஷ்ண பிள்ளை, இலங்கை தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

Source: https://tamilwin.com/article/sambandan-s-memorial-in-kaluvanchigudi-1720304787

NO COMMENTS

Exit mobile version