Home இலங்கை அரசியல் சம்பந்தனின் மறைவிற்கு நாடாளுமன்றில் சபாநாயகர் இரங்கல்

சம்பந்தனின் மறைவிற்கு நாடாளுமன்றில் சபாநாயகர் இரங்கல்

0

நேற்று முன்தினம் (30) மறைந்த முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தனின் (R.Sampanthan) மறைவுக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) இரங்கல் தெரிவித்துள்ளார்.

இன்று (02) காலை ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வில் ஆரம்ப உரை ஆற்றும் போதே சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டார்.

இதேவேளை, இரா சம்பந்தனின் மறைவை அடுத்து நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக மகிந்த யாப்பா அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற முன்றலில் அஞ்சலி

அத்துடன், நாளைய தினம் (03) மாலை இரண்டு மணி முதல் நான்கு மணிவரை இரா சம்பந்தனின் பூதவுடல் நாடாளுமன்ற முன்றலில் அஞ்சலிக்க்காக வைக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

மேலும், சம்பந்தனின் மறைவு தொடர்பான அனுதாப பிரேரணை விரைவில் இடம்பெறும் எனவும் சபாநாயகர் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/sampanthan-passes-away-sl-speaker-condolences-1719898102

NO COMMENTS

Exit mobile version