Home இலங்கை சமூகம் வீதிக்கு இறங்கிய சம்பூர் மகா வித்தியாலய மாணவர்களின் பெற்றோர்கள்

வீதிக்கு இறங்கிய சம்பூர் மகா வித்தியாலய மாணவர்களின் பெற்றோர்கள்

0

சம்பூர் மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி
செய்து தருமாறு கோரி பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (26.05.2025) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சம்பூர் மகா வித்தியாலயத்தில் 526 பாடசாலை மாணவர்கள் உள்ளனர். அத்தோடு
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நால்வரும், ஆசிரியர்கள் 20 பேரும் தற்போது
கடமையாற்றுகின்றனர்.

ஆசிரியர் பற்றாக்குறை

இந்த நிலையில் கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் உள்ளிட்ட 6 முக்கிய
பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் நிலையில் இதனை நிவர்த்தி
செய்துதருமாறு கோரியே இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்ட இடத்திற்கு மூதூர் வலய கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப்
பணிப்பாளர் தேவதாஷ் ஜெயந்தன் வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களோடு கலந்துரையாடியுள்ளார்.

அதன்போது ஆசிரியர் பற்றாக்குறைக்கு முடியுமான ஏற்பாடுகளை செய்து தருவதாக தெரிவித்ததை
அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றமை
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version