யுத்த காலத்தின் இறுதிப்பகுதியில் சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்து, வாகரையிலிருந்து மட்டக்களப்பு வரை சம்பூர் மக்கள் நடந்து சென்று முகாம்களில் இருந்தனர்.
சுமார் 10 வருட காலங்களாக முகாம்களில் இருந்த அந்த மக்களின் யாருக்கும் தெரியாத ஏக்கம் உள்ளது எனலாம்.
குறித்த மக்கள் இடம்பெயர்ந்த பின்னர், சம்பூரில் வீடுகள் இல்லாமல் ஆக்கப்பட்டு இந்திய அனுசரணையுடன் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டது.
இருப்பினும், முகாம்களில் இருந்த மக்கள், தமது இடம் தான் எமக்கு வேண்டும் என உறுதியுடன் இருந்தார்கள்.
இந்நிலையில், அவர்களின் இந்த நிலைப்பாட்டுக்கு மத்தியில் பல்வேறு ஏக்கங்களும் கனவுகளும் இருந்தன எனலாம்.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
