Home இலங்கை சமூகம் யாழில் இடம்பெற்ற சமுர்த்தி வங்கிகளின் கணக்காய்வு மற்றும் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

யாழில் இடம்பெற்ற சமுர்த்தி வங்கிகளின் கணக்காய்வு மற்றும் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

0

யாழ். (Jaffna) மாவட்டத்திலுள்ள சமுர்த்தி வங்கிகளின் கணக்காய்வு மற்றும்
முன்னேற்ற மீளாய்வுக்கான கூட்டம் இடம்பெற்றுள்ளது. 

அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (15)
காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர்,

“யாழ்ப்பாண மாவட்டத்தில்
33 சமுர்த்தி வங்கிகள் இயங்கி வருகின்றன. சமுர்த்தி வேலைத்திட்டத்திலிருந்த
நிவாரண வழங்கல் விடுவிக்கப்பட்டு நலன்புரி நன்மைகள் திட்டத்துடன்
இணைக்கப்பட்டுள்ளன. 

வங்கிச் செயற்பாடுகள் 

வங்கிகளின் நுண்நிதி செயற்பாடுகள் தொடர்பாக எழும்
ஐய வினாக்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். தற்போது எமது யாழ்ப்பாண
மாவட்டமானது சமுர்த்தி வங்கிச் செயற்பாடுகளில் தேசிய அளவில் முன்னணி
வகிக்கின்றது. அதற்கு சமுர்த்தி சார்ந்த அலுவலகர்களின் ஒத்துழைப்பிற்கு எமது
நன்றிகள்.

மேலும், மக்களின் வறுமையினை குறைத்து அவர்களின்
பொருளாதாரத்தினை உயர்த்துவதற்கு சமுர்த்தி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள்
மேன்மேலும் வினைத்திறமையாக செயற்பட வேண்டும்” அரசாங்க கேட்டுகொண்டுள்ளார். 

இக்கலந்துரையாடலில், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், கணக்காளர், சமுர்த்தி
முகாமையாளர்கள் (தலைமைப்பீடம்), வங்கி முகாமையாளர்கள், மாவட்ட சமுர்த்தி
உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version