சட்டவிரோத பேரணியொன்றை நடத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தவின் சகோதரர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஜகத் சமந்த உள்ளிட்ட இருவர் ஆரச்சிகட்டு பகுதியில் வைத்து நேற்று(28) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைகள்
கடந்த மார்ச் மாதம் சட்டவிரோத பேரணி நடாத்தியமை தொடர்பிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தப் பேரணி குறித்து புத்தளம் பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அதனடிப்படையிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
