இந்தியன் ப்ரீமியர் லீக் 2026 தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கான தலைமை பயிற்றுவிப்பாளராக மீண்டும் இலங்கை அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, தலைமை பயிற்றுவிப்பாளராக சங்கக்கார நியமிக்கப்பட்டதை விசேட AI காணொளியூடாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெளியிட்டுள்ளது.
AI காணொளி
தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தனித்துவமான திரைப்பட காட்சியான ஜெயிலர் பட காட்சியை AI மூலமாக மாற்றியமைத்து இதனை அறிவித்துள்ளனர்.
தற்போது இந்த காணொளி இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த இந்தியன் ப்ரீமயர் லீக் 2025 தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு ராகுல் ட்ராவிட் பயிற்றுவிப்பாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
