Home சினிமா சரிகமப L’il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க

சரிகமப L’il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க

0

சரிகமப L’il Champs

கடந்த வாரம் சரிகமப L’il Champs சீசன் 4 நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இதில் திவினேஷ் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் இடத்தை யோகஸ்ரீ மற்றும் மூன்றாம் இடத்தை ஹேமித்ரா ஆகியோர் பிடித்தனர்.

ரவி மோகன் படங்களை தயாரித்து ரூ. 100 கோடி நஷ்டமடைந்த அவரது மாமியார்..

வெற்றிபெற்ற திவினேஷிற்கு ரூ. 10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. மேலும் வெற்றிபெற்ற திவினேஷிற்கு மெல்லிசை இளவரசன் என்கிற பட்டமும் வழங்கப்பட்டது.

திவினேஷின் மிகப்பெரிய பரிசு

சரிகமப L’il Champs நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன் தனது தந்தை குறித்து திவினேஷ் பேசியிருந்தார். தன்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வருவதால், அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை, அவரை வேலையை விட்டு நீக்கிவிட்டனர் என கூறியிருந்தார்.

அவருக்கு ஒரு Tata Ace வண்டி இருந்தால், சொந்தமாக அவரே தொழில் செய்வார் என்பதால், உடனடியாக அங்கிருந்த நடுவர் ஸ்ரீனிவாஸ், அந்த வண்டியை வாங்க எவ்வளவு தொகை தேவைப்படும் என கேட்டார்.

பின் அவர் அதற்கு தன்னால் முடித்த தொகையை கொடுத்தார். அவர் மட்டுமின்றி பலரும் முன் வந்த தங்களால் முடிந்த உதவியை செய்தனர்.

தற்போது டைட்டில் வின்னர் திவினேஷ் தந்தைக்கு, அவர் ஆசைப்பட்ட படி புதிய Tata Ace வண்டி வாங்கி கொடுத்துள்ளார். அதனை மகிழ்ச்சியுடன் பாடகி ஸ்ரீனிவாஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதோ அந்த பதிவு.. 

NO COMMENTS

Exit mobile version