Home சினிமா சரிபோதா சனிவாரம் திரைவிமர்சனம்

சரிபோதா சனிவாரம் திரைவிமர்சனம்

0

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவர் நானி. இவர் நடிப்பில் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சரிபோதா சனிவாரம். இதற்கு முன் இவர்கள் இருவருடைய கூட்டணியில் வெளிவந்த அடடே சுந்தரா படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடைய வில்லை.

ஆனால், சரிபோதா சனிவாரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே. சூர்யாவும், கதாநாயகியாக பிரியங்கா மோகனும் நடித்துள்ளனர். பல எதிர்பார்ப்புக்குகளுடன் வெளிவந்துள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்றும் விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

மங்காத்தா படத்தில் அது இல்லை! ஆனால் GOATல் இருக்கும்.. கதையை கூறிய வெங்கட் பிரபு..

கதைக்களம்

நானி சிறு வயதிலிருந்து மிக கோபக்காரராக வளர்கிறார். எங்கு போனாலும் சண்டை அடிதடி என இருக்க, நானி அம்மா இறக்கும் தருவாயில் வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் உன் கோபத்தை காட்டு என சத்தியம் வாங்கிக்கொண்டு இறக்கிறார்.

அன்றிலிருந்து 6 நாள் தவறுகளை பார்த்து அதை எழுதி வைத்துக்கொண்டு சனிக்கிழமை சென்று அவர்களை அடிக்கிறார். இப்படி இவர் வாழ்க்கை செல்ல ப்ரியங்கா மோகன் நட்பு கிடைக்கிறது. அவர் போலிஸாக இருக்க, அதே ஸ்டேஷனில் SJ சூர்யா இன்ஸ்பெக்டர் ஆக இருக்கிறார்.

எஸ் ஜே சூர்யா மிக கொடூரமாக எப்போதும் கோபம் வந்தாலும் சோகுல பாலம் என்ற தனக்கு சொந்தமான ஊர் மக்களை அடித்து தன் கோபத்தை தனித்துக்கொள்கிறார்.

நானி ப்ரியங்கா மோகன் மூலம் சோகுல பாலம் மக்கள் நட்பு கிடைக்க, பிறகு என்ன அந்த மக்களுக்காக எஸ் ஜே சூர்யாவை எதிர்க்க அதன் பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை. 

படத்தை பற்றிய அலசல்

நானி தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தில் ஹிட் படங்களாக கொடுத்து வருபவர். அப்படி அடடா சுந்தரேஷா என்ற பீல் குட் படம் தோல்வி அடைந்தாலும் அதே இயக்குனருடன் ஹிட் கொடுப்பேன் என்று சூர்யாச் சாட்டர்டே படத்தில் களம் இறங்கியுள்ளார். அதற்கு ஏற்றார் போலவே தன் நேச்சுரல் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.

ஒரு படத்திற்கு மிக முக்கியம் வில்லன் கதாபாத்திரம் தான், அது அமைந்தாலே படம் தானாகவே வெயிட் ஆகி விடும், அந்த வகையில் தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் புகுந்து விளையாடும் எஸ் ஜே சூர்யா இருக்க பிறகு என்ன பயம்.

நானி, எஸ் ஜே சூர்யாவின் ஆடுபுலி ஆட்டமாக செல்கிறது படம். அதிலும் எஸ் ஜே சூர்யாவை பார்த்தாலே ஒரு ஊரே அஞ்சி நடுங்கிறது. ஆனால், அவருக்கே உரிய நக்கல், நய்யாண்டி வசனங்கள் ஆடியன்ஸுடன் கனேக்ட் ஆகி காமெடியாகவும் உள்ளது.

படம் ஒரு யுனிக் கான்செப்ட் என்றாலும் நானி முகத்தை கூட மூடாமல் ஒவ்வொருவரையும் சனிகிழமை அடிக்கின்றார். ஆனால், ஒருவர் கூட அடுத்த நாள் வந்து நானி அடிக்க மாட்டார்கள் இவர்கள் கதையில். நானி தான் அவுங்க அம்மாக்கு சத்தியம் செய்தார், நீங்க யாருக்குப்பா சத்தியம் செய்தீங்க அடுத்த சனிக்கிழமை வரை நானியை அடிக்க காத்திருக்க என்பது போல் ஒரு மெகா லாஜிக் ஓட்டை படத்தில்.

குட் பேட் படத்தின் ரிலீஸ் தள்ளிபோகிறதா? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

ஆனால், நானி, எஸ் ஜே சூர்யா பெர்ப்பாமன்ஸில் இந்த லாஜிக் ஓட்டை மறைகிறது தான். இருவரும் முக்கியமாக இரண்டாம் பாதியில் போட்டி போட்டு நடித்துள்ளனர்.

எஸ் ஜே சூர்யாவை அடித்தது யார் என்று அவர் கண்டுப்பிடிப்பது மூளையை போட்டு உலுக்காமால், எளிதாக பேச்சு வாக்கில் கண்டுப்பிடிப்பது சுவாரஸ்யம். அதிலும் எஸ் ஜே சூர்யா தன் சொந்த அண்ணனையே கொல்ல நினைக்கும் போது, அவரிடம் நானியை கோர்த்துவிடுவது என ராஜ்ஜியம் செய்துள்ளார்.

படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் வரும் ப்ரியங்கா மோகன் அழகுப்பதுமையாக வந்து செல்கிறார். அவ்வளவே கொஞ்சம் நடிக்கவும் முயற்சி செய்யுங்கள் என்றே சொல்ல தோன்றுகின்றது.

படத்தின் ஒளிப்பதிவு தெலுங்குப்படத்திற்கே உண்டான கலர்புல், அதுவும் சனிக்கிழமை என்றால் சிவப்பு கலரில் காட்டுவது சூப்பர், அதே சமயம் படத்தை முழுவதுமாக தூக்கி சுமப்பது நானி, சூர்யாவிற்கு பிறகு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் தான்.

க்ளாப்ஸ்

நானி, எஸ் ஜே சூர்யா ஆடுபுலி ஆட்டம்.

படத்தின் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது.

படத்தின் பின்னணி இசை  

பல்ப்ஸ்

முதல் பாதி கொஞ்சம் மெதுவாக நகர்கிறது.

லாஜிக் மிஸ்டேக்குகள்.


மொத்தத்தில் நானி-விவேக்(இயக்குனர்) கூட்டணி ரொமான்ஸ் ஜானரில் விட்டதை ஆக்‌ஷன் ஜானரில் பிடித்து சக்சஸ் ஆகிவிட்டனர்.  

NO COMMENTS

Exit mobile version