Home சினிமா ரஜினி படத்தை பார்த்துவிட்டு 40 வருடங்களாக செய்த தவறு.. வெளிப்படையாக சொன்ன சசிகுமார்

ரஜினி படத்தை பார்த்துவிட்டு 40 வருடங்களாக செய்த தவறு.. வெளிப்படையாக சொன்ன சசிகுமார்

0

சசிகுமார்

திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவராக வலம் வருகிறார் சசிகுமார். பாலாவிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து பின் சுப்ரமணியபுரம் என்ற படத்தை இயக்கியும், நடித்தும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்த படத்தின் வெற்றிக்கு பின் பல வெற்றி படங்கள் கொடுத்தார். சில தினங்களுக்கு முன் இவர் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

தற்போது Freedom படத்தில் நடித்துள்ளார். சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து நடிகை லிஜோமோல் ஜோஷ் நடித்துள்ளார்.

பிரபல யூடியூபர் குட்டி TTF யூடியூப் வருமானம்.. முழு விவரம் இதோ

செய்த தவறு

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பணம் குறித்து சசிகுமார் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” பணம் என்றால் என்ன என்பது குறித்து இப்போது புரிந்துகொண்டேன். பணத்தை மதிக்க தெரிந்துகொண்டேன். தளபதி படத்தில் ரத்தம் கொடுத்துவிட்டு ரஜினி பணம் கொடுக்கும்போது நன்றி சொல்வார்கள்.

உடனே அவரோ வெறும் பணம்தானே என்று சொல்வார். அதெல்லாம் பார்த்துவிட்டு நான் பணத்தை மதிக்கவே இல்லை. அந்தப் பணம் 40 வருடங்களாக என்னை மதிக்காமல் இருக்கிறாயா என்று கேட்டு அதை மதிக்க வைத்துவிட்டது. அதுதான் பணத்தின் குணம்” என்று தெரிவித்துள்ளார்.     

NO COMMENTS

Exit mobile version