முன்னணி தாயக செயற்பாட்டாளர்களில் ஒருவரான பெரிய மகேஸ் என அழைக்கப்படும் சதாசிவம் மகேஸ்வரனின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் எதிர்வரும் 27 ஆம் திகதி லண்டனில் (London) இடம்பெறவுள்ளது.
கடந்த 15ஆம் திகதி பிரித்தானியாவில் மரணமடைந்த சதாசிவம் மகேஸ்வரனுக்கு தாயக செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் இரங்கல் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
தமிழர் தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டக்களத்தில் பெரிய மகேஸ் பங்கெடுத்திருந்தார்.
புலம்பெயர்ந்து பிரித்தானியாவுக்கு சென்ற பின்னர் தாயக விடுதலைப் போராட்டத்துக்கான தனது பங்களிப்பையும் வழங்கியிருந்தார்.
தமிழ் தேசியத்துக்கான பங்களிப்புடன் பிரித்தானியாவில் வாழும் தமிழ் சமூகத்துக்கும் உரிய பங்களிப்பை வழங்கிய இவரது இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இடம்பெறவுள்ளது.