Home இலங்கை சமூகம் குறிஞ்சாக்கேணி பாலம் நிர்மாணிக்க பத்து மில்லியன் டொலர் நிதியுதவி

குறிஞ்சாக்கேணி பாலம் நிர்மாணிக்க பத்து மில்லியன் டொலர் நிதியுதவி

0

திருகோணமலை (Trincomalee) – குறிஞ்சாக்கேணி பாலத்தை நிர்மாணிக்க பத்து மில்லியன் டொலர்கள் நிதியை சவூதி அரேபிய (Saudi Arabia) அரசாங்கம் அன்பளிப்புச் செய்துள்ளது.

குறித்த பாலம் கடந்த 2017ஆம் ஆண்டளவில் இருந்து உடைந்து , அதன் மேல் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகின்றது.

கடந்த 2020ஆம் ஆண்டில் தற்காலிக பாலமும் உடைந்து வீழ்ந்த நிலையில் படகுப் பாதை மூலம் அந்தப் பகுதியில் போக்குவரத்து நடைபெற்றது.

நிதி அன்பளிப்பு 

இந்தநிலையில், 2021ஆம் ஆண்டில், கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு ஒன்றில் ஆற்றை கடக்க முயன்ற 20 மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் 6 பேர் பலியாகி இருந்தனர்.

குறித்த விடயத்தைக் கருத்திற் கொண்டு, குறிஞ்சாக்கேணி பாலத்தை நிர்மாணிப்பதற்காக 10.5 மில்லியன் டொலர்களை சவூதி அரசாங்கத்தின் அபிவிருத்தி நிதியம் வழங்கியுள்ளது.

முன்னதாக சவூதி அரசாங்கத்தினால் பதுளை-செங்கலடி பாதையின் நிர்மாணப்பணிகளுக்கு வழங்கப்பட்டிருந்த நிதியில் எஞ்சிய பணத்தைக் கொண்டு இந்த நிதி அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version