Home இலங்கை குற்றம் வெளிநாட்டவர்களால் இணையத்தில் திட்டமிட்டு பெருந்தொகை பணமோசடி

வெளிநாட்டவர்களால் இணையத்தில் திட்டமிட்டு பெருந்தொகை பணமோசடி

0

இணையத்தில் திட்டமிட்டு பண மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கம்பஹா ஹன்வெல்ல வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் மற்றும் ஹங்வெல்ல அவிசாவளை வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றை சுற்றிவளைத்த போதே இந்த வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குழு சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 29 சீன பிரஜைகள், ஒரு இந்திய ஆண் மற்றும் மூன்று பெண்கள், இரண்டு தாய்லாந்து ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் உள்ளடங்கியுள்ளனர்.

 

நிதி மோசடி

இதன்போது நிதி மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 499 கைப்பேசிகள், 24 மடிக்கணினிகள் மற்றும் 29 கணணிகள் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இந்த சந்தேக நபர்கள் சீனா, இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களையும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த வைப்பாளர்களையும் வலையில் சிக்கவைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

 

 

NO COMMENTS

Exit mobile version