2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை(9) ஞாயிற்றுக்கிழமை
நடைபெறவுள்ளது.
நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 2 ஆயிரத்து 723 பரீட்சை நிலையங்களில் இந்தப்
பரீட்சை இடம்பெறவுள்ளது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி
லியனகே தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சை
இவ்வாண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் மொத்தம் 2
இலட்சத்து 94 ஆயிரத்து 89 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர் என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகள், பாடநெறி சார்ந்த விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்களுக்கான தடை நேற்று முன்தினம் (05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
Source: https://tamilwin.com/article/scholarship-examinations-to-proceed-as-scheduled-1786150862
