வரலாற்றில் முதன்முறையாக பிரிவெனா, சில்மாதா கல்வி நிலையங்களில் பயிலும் பிக்குமார், பிக்குனிகள், மற்றும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த (Sushil Premajayantha) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை மாகாண ஆளுநர்களுடன் அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை அங்கீகாரம்
இந்த புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரல் முடிவடைந்ததையடுத்து புலமைப்பரிசில்கள் வழங்கும் பணி உடனடியாக ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், க.பொ.த உயர் தரத்தில் தகவல் தொடர்பாடல், தொழிநுட்பம் பாடம் கற்கும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கைகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.