Home இலங்கை சமூகம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாரான மாணவன் பரிதாபமாக மரணம்

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாரான மாணவன் பரிதாபமாக மரணம்

0

எல்பிட்டிய பகுதியில் இன்று (17) நடைபெறவிருந்த புத்தாண்டு விழாவிற்கு கிரீஸ் மரத்தை தயார் செய்யும் போது, ​​அதிலிருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிடிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் விளையாட்டு மைதானம் ஒன்றில் புத்தாண்டு விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

 கிரீஸ் மரம் 

40 அடி உயரமான கிரீஸ் மரத்திலிருந்து விழுந்த பாடசாலை மாணவன் எல்பிட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பிடிகல பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 16 வயதுடைய பாடசாலை மாணவன் என்பதுடன் இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி, முடிவுகளுக்காகக் காத்திருந்தவர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், எல்பிட்டிய ஆதார மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் பிடிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version