Home இலங்கை சமூகம் யாழில் கோர விபத்து: பாடசாலை மாணவன் பலி

யாழில் கோர விபத்து: பாடசாலை மாணவன் பலி

0

யாழ்ப்பாணம் (Jaffna) – சுழிபுரம் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

குறித்த விபத்து சம்பவமானது இன்று (5.12.2024) காலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது மூளாய் பகுதியைச் சேர்ந்த மு.சிறிபானுசன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலை 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இரண்டு மாணவர்கள் இன்றையதினம் வகுப்பகற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர்.

இதன்போது மறந்துபோய் வீட்டில் விட்டுச் சென்ற பணத்தினை எடுப்பதற்காக திரும்பி வந்துகொண்டிருந்தவேளை அவர்களது மோட்டார் சைக்கிள் மதலுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது இரண்டு மாணவர்களும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை ஒரு மாணவன் உயிரிழந்துள்ளார்.

மற்றைய மாணவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்து சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த மாணவன் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் கணித பிரிவில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள்: பிரதீபன் – கஜிந்தன்

NO COMMENTS

Exit mobile version