Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் நடந்த விபத்து: பாடசாலை மாணவி படுகாயம்

தமிழர் பகுதியில் நடந்த விபத்து: பாடசாலை மாணவி படுகாயம்

0

திருகோணமலை தலைமையக காவல் பிரிவுக்குட்பட்ட இராஜவரோதயம் வீதியில் இடம் பெற்ற விபத்தில் 15 வயது பாடசாலை மாணவி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (23)இடம் பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வீதியை கடக்க முற்பட்ட போது வான் ஒன்று மோதியதில் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன் வானுடன் மோதுண்டதில் 15 அடி தூரமளவில் குறித்த மாணவி தூக்கி வீசப்பட்ட நிலையில் இவ் விபத்து இடம் பெற்றமை சீசிடீவி காணொளி மூலம் தெரியவருகிறது.

மாணவி படுகாயம்

சம்பவம் தொடர்பாக கண்டியை சேர்ந்த வயது (32) வான் சாரதியை திருகோணமலை தலைமைய காவல்துறையினர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மாணவி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குறித்த விபத்துக்குள்ளான வானை காவல்துறையினர் கைப்பற்றியதாகவும் கைதான சாரதியை நீதிமன்றில் முன்னிலைபடுத்தவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/school-girl-injured-in-accident-in-trincomalee-1713961039

NO COMMENTS

Exit mobile version