நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு (Ministry of Education) விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் மாகாண பிரதம செயலாளர், மாகாண கல்வி செயலாளர் அல்லது மாகாண கல்விப் பணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அத்தோடு, தற்போது நிலவும் காலநிலை காரணமாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுக்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்றையதினம் (14) சில பிரதேசங்களில் உள்ள அரச பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த விடயத்தை கல்வி அமைச்சு நேற்று (13) வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே தெரிவித்திருந்தது.
இதனடிப்படையில், கம்பஹா (Gampaha) மற்றும் களனி கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று (14) மற்றும் நாளை (15) விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.