Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் எட்டு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! வெளியான காரணம்

தமிழர் பகுதியில் எட்டு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! வெளியான காரணம்

0

மன்னார்-மடு பகுதியைச் சேர்ந்த 8 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தட்சணாமருதமடு பகுதியில் ஆமணக்கு விதையை சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாகவே குறித்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

குறித்த பகுதியில் நேற்று (28) பிற்பகல் இந்த மாணவர்கள் ஆமணக்கு விதையை சாப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் 9 வயதுடைய ஆண் குழந்தையொன்றும் 7 பெண் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மடு பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் என்பதுடன் மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.  

மேலதிக தகவல் – ஆசிக்

Source: https://tamilwin.com/article/school-student-admitted-in-hospital-1719625360

NO COMMENTS

Exit mobile version