Home இலங்கை சமூகம் சுற்றுலாவில் பாரபட்சம் பார்த்த ஆசிரியர் : வலயக்கல்வி அதிகாரி விடுத்த அதிரடி உத்தரவு

சுற்றுலாவில் பாரபட்சம் பார்த்த ஆசிரியர் : வலயக்கல்வி அதிகாரி விடுத்த அதிரடி உத்தரவு

0

வவுனியா (Vavuniya) – பூந்தோட்டம் மகாவித்தியாலய மாணவன் ஒருவன் தன்னை பாடசாலையின் கல்விச்
சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லவில்லை என தெரிவித்து வவுனியா தெற்கு
வலயக்கல்வி அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

குறித்த பாடசாலையால் இன்றையதினம் (04.07.2025) திருகோணமலை மாவட்டத்திற்கு கல்விச்
சுற்றலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்காக மாணவர்களிடம் இருந்து பணம்
அறவிடப்பட்டுள்ளது.

குறித்த மாணவனும் சுற்றுலாவிற்கான பணத்தினை வழங்கியுள்ளார்.

கல்விச் சுற்றுலா

இருப்பினும் காலை
சுற்றுலாவிற்கு செல்வதற்கு மாணவன் தயாரான நிலையில் மாணவனை அழைத்துச் செல்ல
முடியாது என அதற்கு பொறுப்பான ஆசிரியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கவலையடைந்த மாணவன் தனது பெற்றோருடன் வவுனியா தெற்கு வலயக்கல்வி
அலுவலகம் முன்பாக சத்தியா கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து
வலயக்கல்வி அதிகாரிகள் பாடசாலை நிர்வாகத்திற்கு அழைப்பை ஏற்ப்படுத்தி மாணவனை
சுற்றுலா அழைத்துச் செல்வதற்கான ஏற்ப்பாடுகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை
வழங்கியிருந்தனர். இதனையடுத்து மாணவன் தனது போராட்டத்தை கைவிட்டிருந்தமை
குறிப்பிடதக்கது.

https://www.youtube.com/embed/gCYSEutbg5U

NO COMMENTS

Exit mobile version