பாடசாலை மாணவி ஒருவர் கடத்திச் செல்லப்படுவது போன்ற காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
கண்டி – கெலிஓயா பிரதேசத்தில் நேற்றையதினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடத்திச் செல்லப்பட்ட மாணவி
வீதியோரமாக இரண்டு பாடசாலை மாணவிகள் நடந்து வரும்போது, அந்த வழியாக வந்து கருப்பு நிற வான் ஒன்றில் வந்தவர்கள் இரு மாணவியர்களுள் ஒருவரை வானில் உள்ளே தள்ளி கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர்.
அந்த பகுதியின் ஊடாக பயணித்த மற்றுமொருவர் இதனை அவதானித்து உடனடியாக குறித்த மாணவியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
எனினும், காப்பாற்றச் சென்ற குறித்த நபரையும் அதே வாகனத்தில் கடத்திச் சென்றதாகவும், கடத்தப்பட்ட மாணவி மற்றும் காப்பாற்றச் சென்ற நபர் ஆகிய இருவருக்கும் என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.