Home இலங்கை கல்வி வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வரும் பாடசாலைகள்! ஜெகதீஸ்வரன் எம்.பி சுட்டிக்காட்டு

வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வரும் பாடசாலைகள்! ஜெகதீஸ்வரன் எம்.பி சுட்டிக்காட்டு

0

மன்னார் மாவட்டத்தில் இயங்கும் தேசிய பாடசாலைகள் பல கடந்த அரசாங்களின்
காலத்தில் கவனம் செலுத்தப்படாமையால் வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வருவதாகவும்,
அதனை தீர்ப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேசிய மக்கள்
சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன்
தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பில்  ஊடகங்களுக்கு
கருத்து தெரிவித்த அவர், 

”அரசாங்கத்தின் கீழ் தேசிய பாடசாலைகள் செயற்படுகின்றன. மன்னார்
மாவட்டத்தில் உள்ள நான்கு தேசிய பாடசாலைகளுக்கு விஜயம் செய்து அதிபர்,
ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன் அங்குள்ள பிரச்சனைகள்
தொர்பிலும் கவனம் செலுத்தினோம்.

ஆசிரிய ஆளணி பற்றாக்குறை

பல தேசிய பாடசாலைகளிலும் ஆசிரிய ஆளணி
பற்றாக்குறையாகவுள்ளது. சில உயர்தர மாணவர்கள் தாம் கற்கும் பாடங்களுக்கு
ஆசிரியர் இன்மையால் வேறு பாடசாலைகளில் சென்று கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் கல்வி கற்கும் சில கட்டிடங்கள் பாழடைந்த நிலையில் காணப்படுவதுடன்,
சில வெடிப்புகளுடனும் ஆபத்தானதாக காணப்படுகின்றது.

இவற்றை கடந்த காலங்களில்
ஆட்சியில் இருந்த அரசாங்ங்கள் எந்த கவனமும் செல்லவதவில்லை. நாம் இவற்றை
அவதானித்துள்ளோம். இதனை எமது கல்வி அமைச்சருடன் கலந்துரைடிய விரைவாக தீர்த்து
வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நானும் பிரதி அமைச்சரும் வாக்குறுதி
கொடுத்துள்ளோம்.

எனவே, எமது அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தி மாணவர்கள் கற்றல்
செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் உதவும்” எனத் தெரிவத்தார்.

NO COMMENTS

Exit mobile version