குறிகாட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு மீண்டும் கடற்பாதை சேவையை ஆரம்பிக்குமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கையை முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய கடற்பாதைக்காக உபகரணங்கள் குறிகாட்டுவான் பகுதிக்கு கனரக வாகனங்கள் மூலம் எடுத்து வரப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் கட்டடப் பொருட்கள் மற்றும் வாகனங்கள் என்பவற்றைக் கொண்டு செல்வதற்கு பல இன்னல்கள் காணப்பட்ட நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கடற்பாதை சேவை இடம்பெற்றது.
குறித்த கடற்பாதை நீரில் மூழ்கியமையால் மீண்டும் பொருட்களை எடுத்து செல்வதில் நயினாதீவு மக்கள் பல இன்னல்களை எதிர்கொண்டனர்.
கடற்பாதை சேவை
பயணிகள் சேவையில் ஈடுபடும் படகுகளிலும், படகுகளை வாடகைக்கு அமர்த்தியும் பொருட்களை எடுத்து சென்று வந்தனர்.
இந்நிலையிலேயே, குறிகாட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு மீண்டும் கடற்பாதை சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு குறிகாட்டுவான் பகுதிக்கு எடுத்து வரப்பட்ட கடற்பாதை உபகரணங்களை நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் நேரில் சென்று பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
