Home இலங்கை சமூகம் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி வேட்டை

விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி வேட்டை

0

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து மேற்கொள்ளப்பட்ட
அகழ்வுப்பணி எவ்வித தடயங்களும் காணப்படாத நிலையில் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி (Kilinochchi) – தர்மபுரம் காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் ஏ 35 பிரதான வீதியில் அருகே தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதம் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டது.

அகழ்வுப்பணி

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமீல் முன்னிலையில் இன்றைய தினம் (31.07.2025) அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டது.

காவல்துறையினர், இராணுவத்தினர், காவல்துறை விசேட அதிரடிப்படையினர், திணைக்களங்களின்
உத்தியோகத்தர்கள் முன்னிலையில் அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்ட போது எந்தவித
தடயங்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப்பணியை நீதவான் இடைநிறுத்தினார். 

https://www.youtube.com/embed/asw5P9Bpkqo

NO COMMENTS

Exit mobile version