Home இலங்கை பொருளாதாரம் 2024இற்கான இரண்டாவது மின்கட்டண திருத்தம் குறித்த அறிவிப்பு

2024இற்கான இரண்டாவது மின்கட்டண திருத்தம் குறித்த அறிவிப்பு

0

இந்த ஆண்டின் இரண்டாவது மின் கட்டண திருத்தம் ஜூலை 15ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ (Manjula Fernando) தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் இன்று (18.06.2024) அறிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், 

“உத்தேச மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் எழுத்துமூலமான கருத்துக்கள் ஜூலை 8ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

கட்டண திருத்தம் 

அதேவேளை, வாய்மூலமான கருத்துக்கள் ஜூலை 9ஆம் திகதி நடைபெறும். 

அதுமாத்திரமன்றி, இந்த கட்டண திருத்தத்தில் மின் கட்டணம் குறைக்கப்பட உள்ளதுடன் அதன்படி குறைக்கப்பட்ட சதவீதங்கள் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி அறிவிக்கப்படும்” என சுட்டிக்காட்டியுள்ளார். 

Source: https://tamilwin.com/article/second-bill-amendment-notice-for-2024-1718705813

NO COMMENTS

Exit mobile version