2025 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நிகழ்வுகளில் இரண்டாம் நாள் நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தின் சுண்டிக்குளம் சந்திப்பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சுண்டிகுளம் சந்திப் பகுதியில் அமைந்துள்ள
விநாயகர் ஆலயத்தில் மோட்ச அர்ச்சனைகள் நடைபெற்றுள்ளது.
அப்போது, சுண்டிகுளம் சந்தியிலிருந்து ஒழுங்குபடுத்தப்பட்ட மண்டபம் வரை மாவீரரை
பெற்றெடுத்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீதி ஊடாக மங்கள வாத்திய
இசையுடன் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அங்கு ஒழுங்குபடுத்தப்பட்ட இடத்தில்
மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளும் மலர் வணக்கம் நிகழ்வும் நடைபெற்றதுடன்
மாவீரரின் பெற்றோர் மதிப்பளிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி – தேவந்தன்
புதுக்குடியிருப்பு
போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு
ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி
வணங்கும் மாவீரர் நாள் இந்த ஆண்டும் கார்த்திகை 27ஆம் திகதி தமிழ்மக்களால்
அனுஷ்டிக்கப்படவுள்ளது.
அந்தவகையில், புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசம் என்றுமில்லாதவாறு
கோம்பாவில் புலம்பெயர் தேசத்து உறவுகளும் , கோம்பாவில் மக்கள், இளைஞர்கள்
இணைந்து மாவீரர் நாளினை அனுஷ்டிக்க தயார் நிலையில் ஏற்பாடாகியுள்ளது.
செய்தி – ஷன்
