Home இலங்கை அரசியல் மண்டைதீவு – திருகோணமலையை இலக்கு வைத்து அதிர வைக்கும் இரகசிய நகர்வுகள்

மண்டைதீவு – திருகோணமலையை இலக்கு வைத்து அதிர வைக்கும் இரகசிய நகர்வுகள்

0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை தொடர்ந்து இலங்கையின் அரசியல் பரப்பில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த சூழலில் யாழ். குடா நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியான மண்டைதீவு மறைமுகமாக பல விடயங்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மண்டைதீவுப் பகுதியிலே மோடியின் வருகையைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நிதி அளிப்பதாக இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு உத்தரவாதமும் அளித்துள்ளது.

இந்நிலையில் எதற்காக குறித்த பகுதி தெரிவு செய்யப்பட்டது என்ற பல கேள்விகளும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான முதன்மைக் காரணமாக அறியப்படுவது மண்டைதீவுப் பகுதியானது யாழ்.குடாநாட்டின் கடற்பரப்பினுடைய தலைவாசலாக காணப்படுகின்றமையே ஆகும்.

அதாவது மண்டைதீவு கடற்பரப்பு பகுதியை யார் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றார்களோ அதைத்தளமாக வைத்துக் கொண்டு ஏனைய கடற்பகுதிகளை கண்காணிக்க முடியும் என்பதே உண்மையாகும்.

அந்தவகையில் தற்போது நாட்டை ஆளுகின்ற அநுர தலைமையிலான அரசாங்கம் தமிழர்களுடைய பல பூர்வீக நிலங்களை படிப்படியாக இந்தியாவிற்கு வழங்குவதற்கு தயாராகி விட்டுள்ளது என்றே குறிப்பிட முடியும்.

இவ்வாறாக இது தொடர்பான பல மேலதிக விடயங்களை கூறி நிற்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி… 

[FQLZ9MQ

NO COMMENTS

Exit mobile version