Home இலங்கை அரசியல் மண்டைதீவு – திருகோணமலையை இலக்கு வைத்து அதிரவைக்கும் இரகசிய நகர்வுகள்

மண்டைதீவு – திருகோணமலையை இலக்கு வைத்து அதிரவைக்கும் இரகசிய நகர்வுகள்

0

யாழ் (Jaffna) குடாநாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம் மறைமுகமாக பல விடயங்களுக்கு உள்வாங்கப்பட்டிருக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனைப் பலரும் கண்டுகொள்ளாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் மாவட்டத்தில் உள்ள மண்டைதீவுப் (Mandaitivu) பகுதியில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) இலங்கை வருகையின் பின்னர் அவசர அவசரமாக இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.

இந்தநிலையில் இதற்கான நிதியுதவியினை வழங்குவதாக இலங்கை அரசிடம் இந்திய (India) அரசு உறுதியளித்துள்ளது. மண்டைதீவுப் பகுதி எதற்காக தெரிவுசெய்யப்பட்டது என்பது குறித்து நோக்குகையில், யாழ் குடாநாட்டின் கடல்வழித் தளத்தின் தலைவாசல் பகுதியாக மண்டைதீவு இருக்கின்றது.

மண்டைதீவை யார் முழுமையாக வைத்திருக்கின்றார்களோ அவர்கள் அதனை மையமாக வைத்துக்கொண்டு ஏனைய பகுதிகளை நோட்டமிட முடியும். சர்வதேச மைதானத்தை அமைக்கும் இந்தியாவா மண்டைதீவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப் போகின்றது என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.

கச்சதீவை விட மண்டைதீவு பல மடங்கு இலங்கையை பூரண கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுவதுடன் யாழ் குடாநாட்டிலுள்ள ஏனைய தீவுகளையும் இந்துசமுத்திரத்தின் பிராந்தியத்தியத்தையும் பார்வைக்கு உட்படுத்துவதற்கு மிக முக்கியமான தளமாக இருக்கின்ற நிலையிலேயே இந்தியாவின் நாட்டம் அதிகமாக இருக்கின்றது.

அத்துடன் பூநகரிப் பகுதியையும் இலக்கு வைத்து இந்தியா காற்றாலைத் திட்டங்களை ஆரம்பித்தது. மேலும் திருகோணமலை துறைமுகத்தின் தலைவாசல் பகுதியை நோட்டமிடுவதற்காகவும் அதனை கையகப்படுத்துவதற்காகவும் சம்பூர் அனல்மின் நிலையத்தை அமைத்தார்கள். 

இதேவேளை வடக்கு கிழக்கின் தலைவாசல் பகுதிகளில் தன்னுடைய ஆதிக்கம் இருக்க வேண்டும் என்பதில் இந்தியா கரிசனையாக இருக்கின்றது.

இது தொடர்பான மேலும் பல விடயங்களை ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காண்க…..

https://www.youtube.com/embed/6amt7hNB18s

NO COMMENTS

Exit mobile version