Home இலங்கை சமூகம் வடக்கு மாகாண அமைச்சின் செயலாளர் ஒருவர் இடைநிறுத்தம்: ஆளுநர் அதிரடி நடவடிக்கை

வடக்கு மாகாண அமைச்சின் செயலாளர் ஒருவர் இடைநிறுத்தம்: ஆளுநர் அதிரடி நடவடிக்கை

0

வடக்கு மாகாண அமைச்சின் செயலாளர் ஒருவரின் பதவியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
மீளப்பெற்றுள்ளார்.

குறித்த பதவியானது உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மீளப்பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயத்தினை வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இடைநிறுத்தம்

வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல
சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும்
சுற்றாடல் அமைச்சின் செயலாளர் எம்.ஜெகூவின் பதவியே இவ்வாறு மீளப்பெறப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version