Home இலங்கை அரசியல் கூலிப்படைக்கு ஆதரவளித்த பாதுகாப்பு தரப்பினர்! அம்பலப்படுத்திய அநுர

கூலிப்படைக்கு ஆதரவளித்த பாதுகாப்பு தரப்பினர்! அம்பலப்படுத்திய அநுர

0

பாதாள குழுக்களுடன் பொலிஸ் மற்றும் இராணுவத்தில் ஒரு சிலர் தொடர்பு கொண்டுள்ளார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கூலிப் படையாக செயற்பட்டு விட்டு பின்னர் தனது சீருடையை அணிந்து கொள்ளும் பாதுகாப்பு தரப்பினரும் இருந்துள்ளார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

73 டி 56 ரக துப்பாக்கிகள்

இராணுவ முகாமில் இருந்த துப்பாக்கிகள் கடந்த காலங்களில் மாயமாகியுள்ளன. 73 டி 56 ரக துப்பாக்கிகள் பாதாள குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த பத்து மாத காலத்தில் அவற்றில் 35 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மிகுதியானவற்றை கைப்பற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பாதாள குழுக்களை இல்லாதொழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எமக்கு மேலும் சற்று சந்தர்ப்பம் தாருங்கள்.

எமது பாதுகாப்பு மற்றும் புலனாய்வு பிரிவின் மீது எமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. ஆகவே தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற அரசியல் பிரசாரத்தை மேற்கொள்ளாதீர்கள்.

பாதாள குழுக்கள்

இந்த நாடு குற்றங்களின் தேசமாகவே கடந்த காலங்களில் காணப்பட்டது. பாதாள குழுக்களுக்கு அரச அனுசரணையும் வழங்கப்பட்டிருந்தது.

எனவே வீழ்ச்சியடைந்த நாட்டை முன்னேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து தற்போது சரியான பாதையில் அரசாங்கம் பயணித்துக்கொண்டிருக்கிறது.

நாட்டை நல்ல நிலைக்கு கொண்டுவருவதே எமது நோக்கம். அதற்காக எதிர்க்கட்சிகளும் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். நாங்கள் அரசியல் செய்வோம்.

எங்களின் குறைபாடுகள் இருந்தால் விமர்சிக்கலாம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. அதிகாரத்தை பெற்றுக்கொள்ள செயற்படுங்கள். ஆனால் சதித்திட்டம் மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையற்றதாக்க செயற்பட வேண்டாம்” என கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version