கிளிநொச்சி – அம்பாள் நகர் பகுதியில் விவசாயக் காணியை சுற்றி அடைக்கப்பட்டிருந்த
வேலித் தகரங்களை இரவோடு இரவாக சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் அதிகாரிகள் கழற்றிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
குறித்த பகுதியில் உள்ள தோட்ட காணி ஒன்றை கால்நடைகளிடம் இருந்து பாதுகாக்கும்
வகையில் சுற்றி வேலிகள் அமைக்கப்பட்டு நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அங்கு வேலிக்கு அடைக்கப்பட்டிருந்த
தகரங்களை நேற்று முன்தினம் இரவோடு இரவாக சிவில் பாதுகாப்பு துணைக்களத்தின்
முகாமில் பாதுகாப்பில் இருந்தவர்களால் கழற்றிச் செல்லப்பட்டு குறித்த தகரங்கள் சில
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் அலுவலகத்துக்குள் காணப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் குற்றம சுமத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட தரப்பு
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
பதிவு செய்யப்பட்டுள்ளது..
இதேவேளை குறித்த பிரதேசத்தில் சிவில் பாதுகாப்புத் திணைக் களத்தில்
பணியாற்றும் உத்தியோகத்தர்கள் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பதாதிக்கப்பட்ட தரப்பால் கூறப்பட்டுள்ளது.