சிங்கள ஊடகவியலாளரான சமுதித சமரவிக்கிரமவுக்கு (Chamuditha Samarawickrema) வழங்கப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டில் கோட்டாபயவுக்கு (Gotabaya Rajapaksa) எதிரான மக்கள் கிளர்ச்சியின் போது, பொதுமக்களுக்கு ஆதரவாக செயற்பட்ட காரணத்தினால் சமுதித சமரவிக்கிரவை அச்சுறுத்தும் வகையில் சமுதித்தவின் வீட்டுக்கு மனிதக் கழிவுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனையடுத்து ரணிலின் ஆட்சிக்காலத்தில் சமுதித்தவுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
ஊடக சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தல்
அக்காலத்தில் சமுதித்தவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதாது என்றும், அவரைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை என்றும் இன்றைய ஜனாதிபதி அனுரகுமார, இன்றைய அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோரும் குரல் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் சமுதித்தவுக்கு வழங்கப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பு நேற்றையதினம் நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இது ஊடக சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தலின் ஆரம்பம் என்று சமுதித சமரவிக்கிரம குறிப்பிட்டுள்ளார்.