நடிகை ராஷ்மிகா நேஷ்னல் கிரஷ் என சொல்லும் அளவுக்கு ரசிகர்களை கவர்ந்த ஹீரோயினாக இருப்பவர். இந்திய அளவில் அவருக்கு மார்க்கெட் இருக்கிறது.
அனிமல், புஷ்பா 2 என அவரது பல படங்கள் மிகப்பெரிய வசூலை குவித்து இருக்கின்றன.
ரோஸ் கொடுத்தது யார்?
நடிகை ராஷ்மிகா தற்போது கையில் ரோஸ் உடன் சில புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார். அந்த ரோஸ் அவருக்கு கொடுத்தது யார் தெரியுமா.
அவரே தான் தனக்கு ரோஸ் கிப்ட் ஆக கொடுத்துக்கொண்டாராம். “உங்களை நீங்களே அடிக்கடி பாராட்டிக்கொள்ள வேண்டும் என நான் நினைவுபடுத்துகிறேன்” என ராஷ்மிகா பதிவிட்டு இருக்கிறார்.
