Home இலங்கை குற்றம் இலங்கையில் கடந்த வருடம் 61 பேர் சுட்டுப் படுகொலை

இலங்கையில் கடந்த வருடம் 61 பேர் சுட்டுப் படுகொலை

0

இலங்கையில் கடந்த ஆண்டு 100 இற்கும் மேற்பட்ட
துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 61 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 47 பேர்
காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டில் நடந்த பெரும்பாலான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களுக்கு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக
அமைந்துள்ளன என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொலிஸார் விசாரணை 

கடந்த ஆண்டு பதிவான 103 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 56 சம்பவங்கள்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவை என்றும், இதில் 45 பேர்
உயிரிழந்துள்ளமை தங்கள் விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார்
குறிப்பிட்டுள்ளனர்.

16 பேர் கொல்லப்பட்ட ஏனைய 47 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் வெவ்வேறு
காரணங்களால் குறிப்பாக தனிப்பட்ட தகராறுகளால் நிகழ்ந்தவை என்றும் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டில் பதிவான கடைசி துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் டிசம்பர் 28 ஆம்
திகதி மாலையில் பதிவாகியுள்ளது. சீதுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் காரில்
வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில்
ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்தனர்.

தந்தை மற்றும் அவரது இரண்டு
மகன்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் பொலிஸார்
விவரித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version