Home இலங்கை சமூகம் நுகர்வோர் விவகார ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள பல மில்லியன் ரூபாய்!

நுகர்வோர் விவகார ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள பல மில்லியன் ரூபாய்!

0

நாட்டிலுள்ள அரிசி கடை உரிமையாளர்கள் மீதான வழக்குகளில் இருந்து, நுகர்வோர் விவகார ஆணைக்குழு 46 மில்லியன் ரூபாய் அபராதம் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதிக்குள் 2,725 கடைகளை ஆய்வு செய்துள்ளதாக நுகர்வோர் விவகார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரிசி விற்பனை

இதன்போது, அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்ததற்காக 345 கடைகள் மீது நுகர்வோர் விவகார ஆணைக்குழு வழக்குத் தொடர்ந்துள்ளது.

அத்துடன், அரிசி விற்பனை விலைகளை காட்சிப்படுத்த தவறியதற்காக 623 கடைகள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மேலும், அரிசி இருப்புகளை பதுக்கியதாக 39 கடை உரிமையாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version