Home இலங்கை குற்றம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான அரிசி மூட்டைகளுடன் ஒருவர் கைது

பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான அரிசி மூட்டைகளுடன் ஒருவர் கைது

0

கொழும்பு – 12 பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிசி மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்குக் கிடைத்த தகவலின் பேரில் இன்றையதினம் (15) சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது,  4,750 கிலோ நிறையுடைய 950 அரிசி மூடைகள்  கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணை

இந்த அரிசி தொகையானது, சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version