பலாங்கொடை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த இலங்கை விமானப் படையின் உலங்குவானுர்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இம்புல்பே – பலாங்கொடை, ரத்தனகொல்லவில் பெரும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
அதனை அணைக்கும் செயற்பாடுகளில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
காட்டுத் தீ
இந்நிலையில் காட்டுத் தீயை அணைக்க இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 412 உலங்கு வானூர்தி அப்பிரதேசத்துக்கு விரைந்துள்ளது.
கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன், ரத்மலானை விமானப்படைத் தளத்தில் இருந்து இந்த பெல் 412 உலங்குவானுர்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விமானப்படையின் குறித்த உலங்குவானுர்தி சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து வாளிகளில் நீரை பெற்று காட்டு தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பங்களிப்பை வழங்கும் என்று இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.
