ஹிஸ்புல்லாவின் ட்ரோன் பிரிவின் மூத்த தளபதி ஒருவர் லெபனானில்(lebanon) அண்மையில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல்(israel) படைத்துறை அறிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவத்தின் தகவலின்படி, ஹிஸ்புல்லாவின் வான்வழிப் படைகளில் அலி பரகாத் ஒரு “குறிப்பிடத்தக்க நபராக” இருந்தார், இது யூனிட் 127 என அழைக்கப்படுகிறது. இஸ்ரேல் மீதான ட்ரோன் மற்றும் கப்பல் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பொறுப்பாகும்.
இஸ்ரேல் மீதான ஆளில்லா விமான தாக்குதல்கள்
அலி பரகாத் இஸ்ரேல் மீது டசின் கணக்கான ட்ரோன் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்துவதற்கு ஒரு முக்கிய நபராக இருந்ததாகவும் ஹிஸ்புல்லாவுக்காக ட்ரோன்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகளை உருவாக்குவதில் ஈடுபட்டதாகவும்இஸ்ரேல் படைத்துறை தெரிவித்துள்ளது.
லெபனான் கடற்படை தளபதி
இதேவேளை ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய கடற்படை தளபதியை கைது செய்துள்ளதாக இஸ்ரேல்(israel) அறிவித்துள்ளது.
நேற்று முன்தினம்(01.11.2024) வடக்கு லெபனானில்(lebanon) தமது கமாண்டோ படையினரால் இவர் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஹிஸ்புல்லா தளபதியின் பெயர் இமாத் அம்ஹாஸ் எனவும் இவர் அந்த அமைப்பின் கடற்படையின் மூத்த உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.