Home சினிமா அப்பா ஆகப்போகும் குட் நியூஸை கியூட் புகைப்படங்களுடன் அறிவித்த சீரியல் நடிகர்.. யார் பாருங்க

அப்பா ஆகப்போகும் குட் நியூஸை கியூட் புகைப்படங்களுடன் அறிவித்த சீரியல் நடிகர்.. யார் பாருங்க

0

நடிகர்

சீரியல் நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பான தில்லானா தில்லானா என்கிற டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் அவினாஷ்.

அதன்பின் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சி அவரை பிரபலமடைய வைத்தது. நடன கலைஞராக கலக்க ஆரம்பித்த இவர் அழகு சீரியல் மூலம் நடிகராக களமிறங்கினார்.

அம்மன், சாக்லெட் போன்ற சீரியல்களில் நடித்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வீட்டுக்கு வீடு வாசற்படி என்ற தொடரில் நடித்து வருகிறார்.

குட் நியூஸ்

இந்த நிலையில் சீரியல் நடிகர் அவினாஷ் தனது 13 வருட காதலி தெரேசா என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார்.

இப்போது அவினாஷ் தனது இன்ஸ்டாவில் அப்பா ஆகப்போகும் செய்தியை கியூட் புகைப்படங்களுடன் அறிவிக்க ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். 

NO COMMENTS

Exit mobile version