Home இலங்கை சமூகம் கல்வி துறை குறித்து கிழக்கு ஆளுநர் முன்வைத்துள்ள விடயம்

கல்வி துறை குறித்து கிழக்கு ஆளுநர் முன்வைத்துள்ள விடயம்

0

Courtesy: H A Roshan

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர நேற்று முன்தினம் (10) கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது, மாகாண கல்வி அமைச்சு மற்றும் கல்வித் திணைக்களத்தில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

நிறுவனப் பிரச்சினைகளை முன்வைப்பதற்கான வாய்ப்பு 

அதிகாரிகளிடம் உரையாற்றிய ஆளுநர், கல்வித் துறையில் சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனம் என்ற வகையில், தாமதமின்றி தங்கள் சேவைகளை திறமையாகவும் திறம்படவும் வழங்க வேண்டும் என்று கூறினார்.

நிறுவனப் பிரச்சினைகள் மற்றும் சேவை வழங்கலில் கருத்தில் கொள்ள வேண்டிய பிரச்சினைகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது.

மேலும், ஊழியர்கள் தங்கள் நிறுவனப் பிரச்சினைகளை முன்வைப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. 

NO COMMENTS

Exit mobile version