Home இலங்கை சமூகம் மலையக தொடருந்து மார்க்கத்திலான சேவைகளில் பாதிப்பு

மலையக தொடருந்து மார்க்கத்திலான சேவைகளில் பாதிப்பு

0

கண்டியிலிருந்து பதுளைக்கு இன்று காலை 11:30 மணியளவில் பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு தொடருந்து ஓஹியா தொடருந்து நிலையம் அருகே தடம் புரண்டதால் மலையக தொடருந்து மார்க்கத்திலான
சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாற்று நடவடிக்கை

தொடருந்தின் ஒரு சரக்கு பெட்டி தடம் புரண்டதால், கொழும்பு – கோட்டை – பதுளை
இடையிலான பயணிகள் தொடருந்துகள் பாதிக்கப்படாமல், மாற்று நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளது.

தொடருந்து திணைக்கள அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பகுதியில் உடனடியாக செயல்பட்டு, தொடருந்து பாதை
சரி செய்யும் வரை பயணிகள் மற்றும் சரக்கு தொடருந்துகளின் பாதுகாப்பையும்
செயல்திறனையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version