இலங்கையில் அண்மையில் யானை ஒன்று எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பம் தொடர்பான காணொளி ஒன்று வெளியாக சர்வதேச ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ளது.
“யானையை எரித்துக் கொலை செய்த இலங்கையர்கள்” என தலைப்பிட்டு பல ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளன.
காணொளி வெளியான நிலையில் சம்பவம் தொடர்பில் மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர்.
யானையின் வாலில் தீ
அனுராதபுரத்தில் 42 முதல் 50 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சமூக ஊடகங்களில் விரைவாக வைரலான இந்த கவலையளிக்கும் வீடியோவில், மூன்று ஆண்கள் யானையின் வாலில் தீ வைத்துள்ளனர்.
யானை அதன் முன் காலில் காயம் அடைந்ததால் வேதனையில் தரையில் துடிக்கும் காட்சியை அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ளதால், மூன்று பேரும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
இலங்கையில் யானைகள் புனிதமாகக் கருதப்படுகின்றன, மேலும் அவை சட்டத்தால் பாதுகாக்கப்படுகின்றன.
ஆனால் விவசாயிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் வசிப்பவர்கள் சில நேரங்களில் பயிர்களை அழிக்கும் காட்டு யானைகளைத் தாக்குகிறார்கள்.
இலங்கை சட்டத்தின் கீழ் யானைகள் பாதுகாக்கப்படுகின்றன, மேலும் வேட்டையாடுபவர்கள் ஒன்றைக் கொன்றதற்காக மரண தண்டனையை எதிர்கொள்ளலாம் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கையிலுள்ள யானைகளை பார்வையிட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் நாட்டுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
