Home இலங்கை சமூகம் சம்மாந்துறையில் நாயினால் ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதி

சம்மாந்துறையில் நாயினால் ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதி

0

சம்மாந்துறையில் விசர் நாய்க்கடிக்குள்ளாகி 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று(12.03.2025) சம்மாந்துறை, செந்நெல் கிராம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டாக் காலி நாய்கள்

இதேவேளை, குறித்த பகுதியில் கட்டாக் காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள கட்டாக் காலி நாய்களுக்கு நாளை தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் பல்வேறு பகுதிகளில் கட்டாக் காலி நாய்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version